முஸ்லிம் பெண்களின் கோரிக்கைகள்

MDAsஇலங்கையின் முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தின்(1951) சீர்திருத்தங்கள் மீதான
முஸ்லிம் பெண்களின் கோரிக்கைகள்

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டமானது எல்லா முஸ்லிம்களுக்கும் சமத்துவத்தையும், நீதியையும் உத்தரவாதப்படுத்தக் கூடிய வகையில் திருத்தப்படல் வேண்டும். பன்மைத்துவ கலாச்சாரத்தைக் கொண்ட சமூக அமைப்பில் வாழும் இலங்கை முஸ்லிம்கள் தமக்கான சவால்களை முகங்கொடுக்கக் கூடிய வகையில் முஸ்;லிம்களின் குறைகளை முக்கியமாக முஸ்லிம் பெண்களினதும், சிறுமிகளினதும் குறைகளைத் தீர்க்கக் கூடிய வகையில் இச்சட்டம் திருத்தப்படல் வேண்டும். புனித அல்குர்ஆனின் 4வது சூறா 58வது வசனத்தில் அல்லாஹ_த்தஆலா பின்வருமாறு கட்டளையிடுகின்றான்.

“(நம்பிக்கையாளர்களே! உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட) அமானிதப் பொருட்களை அதன் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்படைத்து விடும்படியும், மனிதர்களுக்கிடையில் நீங்கள் தீர்ப்புக் கூறினால் (பாரபட்சமின்றி) நீதமாகவே தீர்ப்பளிக்குமாறும் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு கட்டளையிடுகின்றான். உங்களுக்கு அல்லாஹ் செய்யும் இவ்வுபதேசம் மெய்யாகவே எவ்வளவு சிறந்தது? நிச்சயமாக அல்லாஹ் செவியுறுபவனாகவும், உற்று நோக்கினவனாகவும் இருக்கின்றான்.”
சட்டத்தின் ஏற்பாடுகளாவன சகலருக்கும் சமத்துவத்தையும், நீதியையும் உறுதிப்படுத்தல் வேண்டும் என்பதுடன் நடபடிச் சட்டமானது பெண்கள் உள்ளடங்கலாக சமூகத்தின் அங்கத்தவர்கள் அனைவரின் தேவைகள் சார்பாகவும் கூருணர்வுள்ளதாகவும் இருத்தல் வேண்டும். இந்த அடிப்படையில் சட்டத்தினதும், அதன் நடபடியினதும் சீர்திருத்த முயற்சிகளின் போது கட்டாயம் கருத்தில் கொள்ள வேண்டிய 4 வழிகாட்டற் கொள்கைகள் என நாம் நம்புபவற்றை கீழே விதந்துரைக்கின்றோம்.
சீர்திருத்தத்திற்கான வழிகாட்டற் கொள்கைகள்

1. சமத்துவம், நீதி மற்றும் பாரபட்சமின்மை என்பவற்றை உறுதிப்படுத்துவதற்கான அரச பொறுப்புடைமை
அனைத்து பிரசைகளும் சமமாகவும், எந்தவிதமான பாரபட்சங்களும் இன்றியும் நடாத்தப்படுவதனை உறுதி செய்ய பங்கும், பொறுப்பும் இலங்கை அரசுக்கு உண்டு. சட்டத்தின் முன் சமம், சட்டத்தின் கீழான சமமான நடாத்துகை என்பது ஒரு அடிப்படை உரிமை. முஸ்லிம் தனியார் சட்டமும் காதிநீதிமன்ற முறைமையும் விசேட சட்டங்கள் என்ற அடிப்படையில் எந்தவொரு முஸ்லிமுக்கும் அரசியலமைப்பில் அடிப்படை உரிமையின் கீழ் உத்தரவாதமளிக்கப்பட்டுள்ள பாதுகாப்புக்களை மறுதலிப்பதற்காக பிரயோகிக்கப்படல் முடியாது. இது அனுமதிக்கப்படுமாயின் சில முஸ்லிம் பிரசைகள் மிகவும் சுலபமாக இரண்டாம் தர பிரசைகளாக ஆக்கப்படுவர். ஆகவேதான் முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தின் ஏற்பாடுகள், நடபடிகள் மற்றும் அமுலாக்கல் என்பன அடிப்படை உரிமைகளை மீறாது என்பதனை இச்சட்ட சீர்திருத்த நடபடிகள் உறுதிப்படுத்தல் வேண்டும். பெண்கள், திருமணம் மற்றும் விவாகரத்து தொடர்பில் தம் சம்மதத்தை வெளிப்படுத்த பூரண சுயாதிக்கமும், சுயவிருப்பும் உள்ள தனிநபர்கள் என்பதனை முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டம் அங்கீகரிக்க வேண்டும் என்பதுடன் இக்கொள்கைக்கான ஆணையையும் வழங்குதல் வேண்டும்.

2. சீர்திருத்தத்தில் முக்கிய பங்குதாரர்களாக பெண்கள்
முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தினாலும், காதிநீதிமன்ற முறைமையினாலும் மிக அதிகமாக பாதிப்புக்குள்ளாகின்றவர்களாக பெண்களே காணப்படுகின்றனர். அதுமட்டுமன்றி இச்சட்டம் திருத்தப்படல் வேண்டும் என்பதற்கான கோரிக்கை அடிப்படையில் பெண்களிடம் இருந்தே எழுந்தது. எனவே இச்சட்டத்தினதும், அதன் அமுலாக்கல் நடைமுறையினதும் மீதான பெண்களின் அனுபவங்களும், அப்பெண்களின் நீதிக்கான எதிர்பார்ப்புக்களும் இச்சீர்திருத்த நடபடியில் கருத்தில் எடுக்கப்பட்;டு அதன் அடிப்படையில் திருத்தங்கள் செய்யப்படல் வேண்டும். தற்போது இடம்பெற்று வரும் சட்டத்திருத்த முன்னெடுப்புக்களில் தீர்மானம் எடுக்கும் தளங்களில் முஸ்லிம் பெண்களுக்கான ஸ்தானம் உறுதிப்படுத்தப்படல் வேண்டும். அவர்களின் குரல்களும், கோரிக்கைகளும் செவிமடுக்கப்படல் வேண்டும் என்பதுடன் பெண்களே பிரதானமாக பாதிக்கப்படுபவர்கள் என்ற ரீதியில் இச்சட்டத்திருத்த நடபடியில் அவர்கள் இணைக்கப்படல் வேண்டும்.

3. முஸ்லிம் சமூகத்தினது பன்மைத்தன்மைக்கும், அதன் வௌ;வேறு கருத்துக்களுக்கும் மதிப்பளித்தல்

இலங்கையிலுள்ள முஸ்லிம்கள் பன்மைத்தன்மை கொண்டவர்களாவர். (இது இனத்தின் அடிப்படையில் வேறுபடுகின்றது: உதாரணமாக. சோனகர்கள், மலேயர்கள், மேமன்கள், போறாக்கள், ஏனைய பிற. மேலும் இவர்கள் பின்பற்றும் மத்ஹப் எனப்படும் இஸ்லாமிய அடிப்படைகளிலான வேறுபாடும் உண்டு. அத்துடன் இஸ்லாமிய சிந்தனைக் கோட்பாடுகளிலும் இவர்களிடையே வேறுபாடு காணப்படுகின்றது. சட்டசீர்திருத்த நடபடிகளும், அதன் விளைவான சட்டமும் சமூகத்துள்ளே காணப்படும் இந்த பன்மைத்தன்மையினை அங்கீகரித்தலும், மதித்தலும், பிரதிபலித்தலும் வேண்டும். சட்டதிருத்தத்தின் எல்லையானது ஒரு சிலரது ஒரேவிதமான, குறுகிய பொருள்கோடல்களாக அவை பலமான, நன்கு தம் கருத்தை முன்வைக்கக் கூடிய பழமைமைவாத ஆண்களைக் கொண்ட குழுக்களாய் இருப்பினும் கூட அவற்றிற்குள் சிறைப்படாமல் இருத்தல் வேண்டும்.

4. இஸ்லாமிய சட்டவியலின் பன்மைத்தன்மையை அங்கீகரித்தல்
இஸ்லாமிய சட்டவியலானது நிலைமாற்றமில்லாத ஒன்று அல்ல என்பதுடன் இச்சட்டவியலானது சமூக, பொருளாதார, கலாசார மாற்றங்களுக்கும், வௌ;வேறுபட்ட நடைமுறை தேவைகளுக்கும் முகம் கொடுக்;கக் கூடிய வகையில் மாற்றமடைந்து வருகின்ற ஒன்றாகவும் காணப்படுகின்றது. உலகில் ஒரே ஒரு விதமான இஸ்லாமிய சட்டங்கள் மட்டுமே காணப்படுகின்றது எனும் மாயையானது முஸ்லிம் சட்டசீர்திருத்தத்திற்குள்ள பெரும் தடைகளுள் ஒன்றாகக் காணப்படுகின்றது. உலகிலுள்ள முஸ்லிம் சட்ட முறைமைகளை கூர்ந்து நோக்கினால் அல்குர்ஆனிய கட்டளைகளுக்கு பல்வேறுபட்ட, மிகப் பரந்துபட்ட பொருள்கோடல்கள் வழங்கப்பட்டிருப்பதனை அவதானிக்க முடியும். முஸ்லிம் பெண்களுக்கு நீதியையும், சமத்துவத்தையும் உறுதிப்படுத்தக் கூடிய வகையில் முஸ்லிம் சட்டங்களைத் திருத்துவதற்கு இஜ்திஹாத் (இஸ்லாமிய சட்டவியலுக்கு வியாக்கியானம் செய்தல்) முறைமையினைப் பிரயோகிப்பதன் ஊடாகவும் மற்றும் பால்நிலை சம்பந்தமாக வௌ;வேறுபட்ட முற்போக்கான சட்டங்களையும், கொள்கைகளையும் தெரிவு செய்வதன் ஊடாகவும் (தக்கைய்யுர் அல்லது பன்மைத் தெரிவு) இயலுமாய் இருக்கும்.

Screen Shot 2017-03-31 at 10.57.08 PMScreen Shot 2017-03-31 at 10.57.20 PMScreen Shot 2017-03-31 at 10.57.30 PMScreen Shot 2017-03-31 at 10.57.39 PMScreen Shot 2017-03-31 at 10.57.47 PMScreen Shot 2017-03-31 at 10.57.55 PM